Tuesday, August 11
அ ஆ இ ஈ
நேற்று "அ ஆ இ ஈ " படம் பார்த்தேன், ஒரு "பீல் குட்" வகையான படம். எனக்கு அது தெலுங்கு படம் ரீமேக் என்று தெரியாது, முன்பு ஒரு முறை பார்க்க நினைத்தபோது தவறி விட்டது அதனால் நேற்று பார்த்தேன்.
இப்போது கதைக்கு வருவோம் பிரபு ஒரு ஆயர்வேத வைத்தியர் அவரிடம் பயில வெளிநாடுகளிருந்து பலபேர் அவருடைய வீட்டில் தங்கிருக்கிறார்கள் (அவர்களுக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை, பாடல் காட்சிகளில் இணைந்து கூட்டத்துக்கு உதவுகிறார்கள்). பாசக்கார அப்பா பிரபுவுக்கு ஏகப்பட்ட சொத்து, ஒரே மகள் (மோனிகா) சென்னையில் படிக்கிறாள், பெரிய வீடு, தம்பி குடும்பம் ஒன்று கூட இருக்கிறது, கூடவே ஏகப்பட்ட வெள்ளை வேட்டி ஆமா சாமி போடுவதற்கு.
மகளை பிரிய கூடதென்று உள்ளூரிலேயே இளங்கோ (அரவிந்த்) என்பவரைத் திருமணத்திற்காக பிரபு நிச்சயம் செய்கிறார். அனிதா இளங்கோவை சந்தித்து தன்னை சென்னையில் ஆகாஷ் (நவ்தீப்) (காதலித்து) கெடுத்து விட்டதாகவும், அதனால் இந்த திருமணத்தை தன் தந்தைக்கு இந்த விஷயம் தெரியாமல் நிறுத்துமாறு வேண்டுகிறாள். இளங்கோ ஆகாஷைக் கிராமத்துக்கு அழைத்து வருகிறார், அனிதாவுடன் சேர்த்துவைக்க முயற்சி செய்கிறார். இளங்கோவின் நல்ல உள்ளம் கண்டு அனிதாவின் ஒன்றுவிட்ட தங்கை ஈஸ்வரி (சரண்யா மோகன்) இளங்கோவை காதலிக்கிறார். பிரபுவுக்கு அவமானம் ஏற்படாமல் அனிதா - ஆகாஷ் ஜோடிக்கும் இளங்கோ - ஈஸ்வரி ஜோடிக்கும் திருமணம் எப்படி நடக்கிறது என்பதே கதை.
படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் மிகவும் முட்டாள்களாக இருக்கிறார்கள். இதனால் படத்தில் ஒரு ஈடுபாடு வரவில்லை.
பிரபு: பாசக்கார அப்பா, அனால் தன் மகளுக்கு திருமணத்தில் விருப்பம் இருக்க இல்லையா என்பதை கூட கணிக்க தவறுகிறார். வைத்தியரான இவரிடமே இளங்கோ அடிபட்டு இருப்பது போல் நடிக்கிறார், இவரும் நம்புகிறார்.ஆகாஷ் பிஸியோதரபிஸ்ட் என்று அறிமுகப்படுத்தபடுகிறார், வழக்கம் போல் இவரும் எந்த கேள்வியும் கேட்க மறுக்கிறார்.
மோனிகா: ஆகாஷ் இவளை சுற்றிய வந்து கொண்டிருக்கும் போது, அவன் சிறையில் இருப்பதாக நம்புவது.தனக்கு எதுவும் நடக்காமலேயே, கர்ப்பம் தரித்து விட்டதாக நினைப்பது.அனிதா-ஆகாஷ், இளங்கோ- ஈஸ்வரி கோவிலில் திருமணம் செய்ய போகும்போது, நான் அப்பா விருப்பப்படி இளங்கோவை நாளை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று சொல்லுவது... ஐயோ கொடுமை.
இதற்கு ஒரே விதிவிலக்கு ஹனீபா கதாபத்திரம் இளங்கோவின் அப்பா. பணத்தில் மட்டுமே குறி அனால் அதில் தெளிவாக இருப்பார், சம்மந்தம் போடவந்த இடத்தில் வீட்டின் மதிப்பை கணிப்பது எதார்த்தம்.
இவர்கள் மட்டுமல்ல வீட்டில் ஒரு கல்யாண வீடு அளவுக்கு கூட்டம் இருந்தும் யாருக்குமே எந்த சந்தேகமும் வராமல் இருப்பது. ஆகாஷுக்கு அவசரமாக ஈஸ்வரியை பேசி முடிப்பது, கதாநாயகன் முதல் காமெடியன் வரை மூளை இல்லாதவர்கள் நடத்தும் நாடகமே. அனால் படத்தை ஒரு முறை பார்க்கலாம், குடும்பத்துடன் பார்க்கும்படி எடுத்திருகிறார்கள்.
-ஸ்டாலின் வினோத்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment