Monday, February 8

கோவா விமர்சனம்



தினமலர் விமர்சனம்

கோவாவிற்கு வரும் வெளிநாட்டு பெண்களில் யாரையாவது கரெக்ட் பண்ணி கல்யாணம் செய்து கொண்டு அதன் மூலம் அயல்நாட்டில் செட்டில் ஆகத் துடிக்கும் தமிழக குக்கிராமம் ஒன்றை சேர்ந்த மூன்று இளைஞர்களை பற்றிய கதைதான் கோவா!

ஆனால், இந்த மெயின் கதையை விட்டு விட்டு ‌கோவாவில் இந்த மூவருக்கும் அடைக்கலம் கொடுப்பவர், அடைக்கலம் கொடுக்கும் அந்த ஆணின் ஆண் ஜேதடி நபர், அவர்களுக்கு இடையேயான தொடர்பு இவர்களால் அவர்களிடையே வரும் சந்தேகம் என கிளைக் கதைகளுக்கெல்லாம்., அதுவும் அருவறுக்கத்தக்க ஹோமோ செக்ஸ்க்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து மெயின் கதையை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் என்பது கொடுமை!

கதைப்படி, வெளியூருக்கு போய் வந்தாலே வேறு பழக்கங்களை, நாகரீகங்களை ஊருக்குள் கொண்டு வந்து விடுவார்கள் எனும் பயத்தில் இளைஞர்கள் அடுத்த ஊருக்கு போகவே கட்டுப்பாடு வைத்திருக்கும் கிராமத்தில் பிறந்தவர்கள் வைபவ், ஜெய், பிரேம்ஜி அமரன் மூவரும். அதுவும் பிரேம்ஜி அந்த ஊர் கடவுள் அவதாரமாக, சாமி பிள்ளையாக எல்லோராலும் வணங்கப்படும் பிறப்பு. இருந்தாலும் இந்த மூவரும் நைட் ஷோ சினிமா, கூத்து, கும்மாளம் என அடிக்கடி ஊர் எல்லையை தாண்டி பஞ்சாயத்து முன் நிறுத்தப்படுவதும், சின்னதாக தண்டிக்கப்படுவதும் வாடிக்கை. இதனால் இந்த ஊரும் வேண்டாம், பஞ்சாயத்தும் வேண்டாம் என கிளம்பும் மூவரும் மதுரைக்கு கிளம்புகிறார்கள். அங்கு வெளிநாட்டு பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டு அயல்நாட்டில் செட்டில் ஆகப்போகும் தங்கள் அட்டை கரி நண்பனை பார்த்ததும் ‌மூவருக்கும் கோவா போய், நண்பனை மாதிரி பாரின் ஜோடி தேடும் ஆசை உதயமாகிறது. அப்புறம்..? அப்புறமென்ன....? அடித்து பிடித்து சரக்கு லாரி ஏறி, கோவா போகும் மூவரும் தாங்கள் விரும்பிய வாழ்க்கையையும், துணையையும் தேடிப்பிடித்தார்களா, இல்லையா? என்பது மீதிக்கதை!

இப்படித் தெளிவான கதையில் புரியாத விஷயங்களை... புரி்ந்தும் புரியாமலும் இருக்க வேண்டிய (ஹோமோ செக்ஸ்) சமாச்சாரங்களையெல்லாம் புகுத்தி கோவாவா? ஹேமோவா? என கேட்க வைத்திருக்கிறார் டைரக்டர் வெங்கட்பிரபு! நினைத்திருந்தார் தவிர்த்திருக்கலாம்!

ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன் இவர்களது கோவா தோழர் அரவிந்த் ஆகாஷ் என நான்கு நாயகர்களும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர் என்றாலும் பிரேம்ஜி அடிக்கடி குளோஸ் அப்பில் வந்து நம்மை பயமுறுத்துவதையும் தவிர்த்திருக்கலாம்.

சிநேகா, பியா, மிலானி, வில்லன் நடிகர் சம்பத் (ஆமாம் பின்னே...) என நான்கு கதாநாயகிகள். நால்வரும் நச்சென்று நடித்துள்ளனர். அதிலும் சிநேகா, பியாவை அந்த வெள்ளைக்கார மிலானி ஓவர் டேக் செய்து விடுகிறார் என்றால், இவர்கள் மூவரையும் நடிகர் சம்பத் பீட் செய்து விடுகிறார். பேஷ்! பேஷ்!!

ஜெய், பியாவின் காதலைவிட பிரேம்ஜி - மிலானியின் காதல் உருக்கம் என்றால் வைபவ்- சிநேகாவின் காதல் கல்யாண உதறல்...!

சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் கோவா பால்கோவா! யுவன் சங்கர்ராஜாவின் இசையில் ஒன்பது பாடல்கள் ஒன்றிரண்டு மனதில் பதிகிறது. ஒன்றிரண்டு ஓ.கே. எனு தாளம் போட வைக்கிறது.

‌கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என டைட்டிலில் கார்டு வரும் வெங்கட்பிரபுவிடம் கேட்க வேண்டும்... கோவாவில் கதை எங்கே இருக்கிறது என்று!

கோவாவின் சப்-டைட்டிலாக வரும் எ வெங்கட்பிரபு ஹாலிடே மாதிரியே படமும் கதை இல்லாத ஹாலிடே - ஜாலிடேவாக இருக்கிறது.

கோவா : டைரக்டருக்கும் அவரது டீமிற்கும் வேண்டுமானால் பால்கோவாவாக இருக்கலாம்...! நமக்கு?

--------------------------------

விகடன் விமர்சனம்

பாரின் அழகிகளை திருமணம் முடித்து வெளிநாட்டில் செட்டில் ஆகும் உயர்ந்த லட்சியத்துடன் கிளம்பும் மூன்று இளைஞர்கள் வந்து சேரும் இடம் கோவா.

சினிமாவுக்கு போனதற்காக பிரேம்ஜி அமரன், ஜெய், வைபவ் மூவரையும் தண்டிக்கிறது பண்ணைப்புர பஞ்சாயத்து. வெறுப்பில் கோயில் நகைகளையும் அபேஸ் செய்து கொண்டு மதுரைக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு கைடு நண்பன் கோவாவில் ஒரு பாரின் பிகரை உஷார் செய்து, திருமணம் செய்து கொள்வதை பார்த்ததும் மூவருக்குள்ளும் பட்டாம்பூச்சி, கோவா கிளம்புகிறார்கள். அங்கே மூவரும் சந்திக்கும் முத்தங்களும் யுத்தங்களும்தான் கதை. தன் அக்மார்க் குரூப் காமெடி டிராக்கை கோவா கிளாமர் டிராக்கில் ஒட்டியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. பண்னைப்புரத்து பஞ்சாயத்து காட்சிகளும் குழந்தை இல்லாத சண்முகசுந்தரத்துக்கு அம்மன் இடி மழையோடு அருள் பாலிப்பதில் பிரேம்ஜி பிறப்பதும் ஆரம்ப ஆர்வத்தை துண்டுகின்றன. ஆனால், மூவரும் கோவாவில் கால் வைத்ததோடு கதையும் அங்கேயே நொண்டியடிக்க ஆரம்பிக்கிறது. தலைப்புக்கு நியாயம் செய்ய பிகினி மோகினிகளும் டிஸ்கோ பப்களும் படம் நெடுக. ஆனால், எதிர்பார்க்காமல் ஒரு கே ரிலேஷன்ஷிப் ஜோடி (ஓரினசேர்க்கை) படம் முழுக்க வந்து நேக்காக சிரிக்க வைக்கிறார்கள்.

படத்தின் ஹீரோ கிட்டத்தட்ட பிரேம்ஜி அமரன், தியானம் செய்வதாக குறட்டை விடுவதும், கஞ்சா போதையில் நிலாவை பார்த்து சிரிப்பதுமாக சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஆனால், என்ன கொடுமை சார் இது? வசனத்தையும், ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்களையும் இன்னும் எத்தனை படங்களில் தான் பார்ப்பது ஜி? தமிழ் சினிமாவுக்கே கொஞ்சம் புதுசான ஹோமோ நண்பன் கேரக்டரில் சம்பத், குழைந்த பேச்சும், நெளிந்த நடையுமாக அட்டகாசப்படுத்துகிறார். ஹேய்... என்னை போய் சந்தேகப்படுறியா? அவன் எனக்கு தம்பி மாதிரி என்று பார்ட்னரிடம் கலங்கி அழும் காட்சிகளில்... வெல்டன் சம்பத்..! யுவர் ஐஸ் லைக் எ பிஷ்யா என ஓட்டை இங்கிலீஷில் உதார்விட்டு பிகர் கரெக்ட் பண்ணும் கேரக்டரில் வசீகரிக்கிறார் ஜெய். பிரேம்ஜியின் வெளிநாட்டு காதலியாக வரும் மெலானியின் மழலை தமிழும், வெட்கமும் ச்ச்சோ ஸ்வீட் அழகு. எந்த பெண்ணையும் கரெக்ட் பண்ணிரலாம்டா என்று பீலா பில்டப் கொடுக்கும் வைபவ்விடம் எக்கச்சக்க ரோமியோ எக்ஸ்பிரஷன்கள். சிக் சில்க் உடைகளில் வந்து ஒரு பாடலுக்கு கட்டிலில் கட்டி புரள்வதோடு சினேகா பீவர் ஓவர். ஷோகேஸ் பொம்மையாக நயன்தாரா ஒரே காட்சியில் தோன்ற, சிம்பு தோன்றும் அந்த மன்மதன்மேனியா குபீர் பட்டாசு.

யுவன் சங்கர் ராஜாவின் இசை ஏழேழு தலைமுறைக்கும் பாடலில் இளையராஜாவின் அந்த கால இனிமையை மீட்டுகிறது. இதுவரை இல்லாத உணர்விது. பாடல் அலையின் சிறுசாரல் தெளிக்கும் மெலடி. ஷக்தி சரவணனின் கேமரா காட்டும் இடங்களெல்லாம் குளுமை.

கோவாவுக்கு சென்ற பிறகு மூவரும் பியர் குடிப்பதையும், முடி வெட்டுவதையும், தாடியை ட்ரிம் பண்ணுவதையும் எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டே இருப்பது வெங்கட்? எல்லா நேரமும் ஒன்றாக சுற்றித் திரிந்தாலும், வைபவ் சினேகாவை திருமணம் செய்து கொடுமைக்கார குடித்தனம் நடத்துவது யாருக்கும் தெரியாது என்பதை நம்பவே முடியலியே சினேகாவின் கப்பலில் இருக்கும் கோயில் நகைகளை மீட்க வைபவ் அண்ட் கோ எடுக்கும் முயற்சி அவ்வ்வ்வ்

முதல் அரை மணி நேரத்துக்கு பிறகு எங்கும் செல்லாமல் நொண்டியடிக்கும் திரைக்கதை ஹாலிடே சுவாரஸ்யத்தை காலி செய்கிறது.

No comments :

Post a Comment