Monday, February 8

ஓடி போலாமா விமர்சனம்


தினமலர் விமர்சனம்

விரும்பாத ‌பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாநாயகர், கடைசியாக கைப்பிடிக்கும் கதையேதான் ஓடிப்போலாமா கதைதான்!

புதுமுகம் பரிமள், ஆரம்ப கால பராசக்தி சிவாஜி மாதிரி நடிக்க வேண்டும், தமிழ் சினிமாவில் ஓர் இடம் பிடிக்க வேண்டும் என ஓடி, ஆடி உழைத்திருக்கிறார். ஆனால் ஐயோ பாவம். அவரது நடிப்பும், துடிப்பும், சிங்ககுட்டி ஜூனியர் சிவாஜி மாதிரி நம்மை படுத்தி வைப்பது கொடுமை. பரிமள், நடிகை உயிர் சந்தியாவின் சித்தி மகனாம். அதற்காக கதாநாயகராக நடித்தே ஆக வேண்டுமா என்ன? தலையை சுற்றி மூக்கை தொட முயலும் கதையிடமிருந்தும், கதாநாயகரிடமிருந்தும் நம்மை காப்பாற்றும் ஒரே ஆறுதல், கதாநாயகி சந்தியாவும், அவரது ஊட்டி தோழியும்தான். அதுவும் நாயகருக்கும், அவரது நடிப்பிற்கும் பெட்டர் எனும் வகையிலேயே...!

மொத்தத்தில் ஓடிப்போலாமா..., முதல் ரீலில் ஓடிப்போகலாமா, இரண்டாவது ரீலில் ஓடிப்போலாமா... இல்லை இன்டர்வெலில் ஓடிப்போலாமா எனும் எண்ணத்தையே ஏற்படுத்துகிறதென்றால் மிகையல்ல...!

ஓடிப்போலாமா - ஓடிப்போலாமே (தியேட்டரை விட்டு...!)

No comments :

Post a Comment