Monday, February 8
நாய் குட்டி விமர்சனம்
தினமலர் விமர்சனம்
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு எனும் கருத்து சொல்லி வரும் சமீபத்திய தமிழ் படங்களுக்கு மத்தியில் புத்தியை பயன்படுத்தி புதிதாக கதை சொல்லி வெளிவந்திருக்கும். வித்தியாசமான படம்தான் நாய்குட்டி.
ஆனால் நாய்குட்டி பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகரின் புத்தியும், கத்தியும் இழிபுத்தியாகவும், இழிவான தொழிலுக்கும் பயன்படுவதால் இழிவான முடிவை நோக்கி பயணித்து நம்மை உச் கொட்ட வைத்து விடுகிறது. பாவம்!
கதைப்படி, குடித்து குட்டிச்சுவராக, எந்த இலக்கும் இல்லாமல் நாய் குட்டி போன்று அலைந்து திரியும் நாயகரின் வளர்ப்பு தந்தை இறந்த பிறகு, வயிற்று பிழைப்பிற்கு அவர் ஒட்டி வந்த ரிக்ஷாவையே ஓட்ட ஆரம்பிக்கும் ஹீரோ, மெல்ல மெல்ல அந்த ரிக்ஷாவில் பயணிக்கும் விபசார பெண்கள் மூலம் பொம்பளை புரோக்கராக மாறி, இழி தொழிலில் இறங்கி துட்டு சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் உயிருக்கு உயிராக விரும்பும் பெண்ணையே கூட்டாளிகள் தொழிலில் இறக்கி விட முயற்சிக்க, அதை எதிர்க்கும் நாய்குட்டி, அவர்களை வென்று கொன்றாரா அல்லது கொலையுண்டாரா? என்பதுதான் மீதிக் கதை!
நாய் குட்டியாக புதுமுகம் செல்வின். ஜீன்ஸ் பெண்கள் முதல் சேலை கட்டிய பெண்மணிகள் வரை சகலரையும் கூட்டிக் கொடுத்து குதுகலிக்கும் இவர், சிறுமி ஒருத்தியை அவரது 'அந்த மாதிரி' அம்மாவே தன் ஆட்டோவில் ஏற்றி வரும்போது தானும் அழுது நம்மையும் அழ வைக்கிறார். ஆரம்பத்தில் நாய் குட்டி கேரக்டரில் ஒட்ட மறுக்கும் செல்வின், ரிக்ஷாவில் இருந்து ஆட்டோ சவாரிக்கு மாறுவதும், பிரேஸ்லெட், தங்க சங்கிலி என அந்த தொழிலுக்கு தேவையான டூல்ஸ்களுடன் திரிவதன் மூலமும் தன் நடிப்பின் மூலம் நம்மை கட்டிப் போட முயன்றிருக்கிறார். சபாஷ்!
கதாநாயகியாக, நாய் குட்டியின் காதலியாக நிக்கோல். பாவாடை, தாவணியில் குடும்ப பாங்காக, அட... பாடல் காட்சிகளில் கூட மாடர்ன் உடையில் பார்க்க முடியாத நிக்கோல் சற்றே போர். ஆனால் அவரது அம்மாவாக வரும் குப்பத்து பூக்காரி பாக்யஸ்ரீ பாத்திரம் அறிந்து நடித்து, பேஷ்... பேஷ்... சொல்ல வைக்கிறார்.
நாய் குட்டியின் தோழர் சூரி மாரியும் சரி... அவரது ஜோடி சிப்பி ஈஸ்வரியும் சரி... பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு. அது யாருங்க அந்த ரெட்டி? அசல் அக்மார்க் புரோக்கராக பளிச்சிட்டு பந்தா பண்ணுகிறார். வாவ்!
சமூகத்தின் இருண்ட பக்கத்தையும், இழி தொழிலையும் அழகாக படம் பிடித்திருக்கும் இயக்குனர் இன்னும் அழகாக திரைக்கதையையும் திட்டமிட்டிருந்தால் நாய்குட்டி நன்றியுள்ள குட்டியாக இருந்திருக்கும்.
சி.எச்.பிரசாத்தின் ஒளிப்பதிவும், விஜய் பாரதியின் இசையும் அடிக்கிப் போட்ட ஆப்பாயில்..., ஜானி வாக்கர் உள்ளிட்ட குத்துப்பாடல்களையும், உதிரத்தில் ஊஞ்சல் கட்டி... எப்பப் பார்த்தேனோ... உள்ளிட்ட மெலோடி பாடல்களை தாளம் போட்டு கேட்கவும், பார்க்கவும் வைக்கின்றன என்றால் மிகையல்ல!
ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாததால் நாய் குட்டி, நல்ல குட்டி ஆகவில்லை. மொத்தத்தில் நாய்குட்டி சிங்கக்குட்டி அல்ல நரிக்குட்டி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment