Thursday, July 15

துரோகம் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

பிஞ்சிலேயே பழுத்த ஒருவனால் நஞ்சாகிப் போகும் ஒரு கு‌டும்பப் பெண்ணின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்‌டியுள்ளது துரோகம் நடந்தது என்ன?.

கதைப்படி அம்மாவை இழந்து அப்பா செல்லமாக வளரும் வசதியான வீட்டுப் பிள்ளை, அந்த வீட்டு தாதிப் பெண்ணுடன் சல்லாபம் கொள்கிறான். அது போதாதென்று தன் வீட்டிற்கு அருகில் குடிவரும் போலீஸ் அதிகாரியின் பொண்டாட்டியையும் கரண்ட்டை கட் பண்ணி விட்டு அவளது கணவன் போலவே கட்டிப்பிடித்து சல்லாபம் கொள்கிறான். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை‌ தனது மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, அவளை அடிக்கடி சல்லாபத்திற்கு அழைக்கிறான். போலீஸ் அதிகாரியின் மனைவி, புருஷனிடம் போட்டுக் கொடுத்தாளா? அல்லது அந்த காமுகனின் இச்சைக்கு தொடர்ந்து உடன் பட்டாளா? என்பதை வித்தியாசமும் விறுவிறுப்புமாக சொல்கிறது துரோகம் படத்தின் மீதிக்கதை!

கிஷோர், சதிஷ், லீனா, சுவாதி, டெல்லிகணேஷ், ரம்யா சென், கிருஷ்ணன், அம்பிகா உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்கை சரியாகச் செய்திருக்கின்றனர். டெல்லி கணேஷ் மட்டுமே தெரிந்த முகம் என்றாலும் லீனா, சுவாதி ஆகியோரின் நடிப்பும், இளமை துடிப்பும் நம்மை படத்தோடு ஒன்றிப் போக செய்கிறது.

அதேநேரம் கதையின் திருப்புமுனையாக அமையும் அந்த கரண்ட் கட் காமகளியாட்ட காட்சியில் கணவனின் கைக்கும் அடுத்தவனின் ஸ்பரிசத்திற்கும் வித்தியாசம் தெரியாமலா ஒரு பெண் இருப்பாள்? எனும் சந்தேகம் எழுவதையும், இருட்டில் லைட் வெளிச்சம் இல்லாத சூழலில் செல்போனில் இவர்களது சரசம் பதிவு செய்யப்படுவதையும் தவிர்த்து நம்பும்படி இக்காட்சிகளை படமாக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனும் எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

மணிஷின் இசையும், மகேஷ்வரனின் ஒளிப்பதிவும், எச்.சமீரின் எழுத்திற்கும் இயக்கத்திற்கும் மேலும் அழகு சேர்க்கின்றன என்றால் மிகையல்ல. இன்றையதினம் திரையரங்கிற்கு வருபவர்களை மனதில் கொண்டு செக்ஸ் பார்முலாவில் படமாகியிருக்கும் துரோகம் சக்ஸஸ்புல் படமாகி இருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

துரோகம் : வசூலும் அபாரம்!!

No comments :

Post a Comment