Tuesday, September 14

அந்தரங்கம் விமர்சனம்


தினமலர் விமர்சனம்



'செக்ஸ்' எனப்படும் அந்தரங்க விஷயத்தில் ஆண்களின் போலி முகத்திரையையும், பெண்களின் முகத்திரையையும் ஒரு சேர கிழித்திட முனைந்திருக்கும் படம் தான் அந்தரங்கம். முகத்திரையை கிழிக்கிறேன் பேர்வழி....என ரசிகர்கள் திரையை கிழித்து பார்க்க தூண்டும் அளவிற்கு அந்த மாதிரி சமாச்சாரங்களையும் அடுக்கி வைத்து வசூலை வாரிக்குவிக்க நினைத்திருப்பது ஓவர் டோஸாகி இருப்பதும் தெரிகிறது.



கதைப்படி, போலி காதலனால் சிவப்பு விளக்கு பகுதியில் தள்ளப்படுகிறாள் கதாநாயகி. அதற்கு உடன்படாத அவள், அங்கிருந்து எவ்வாறு தப்பிக்கிறாள்? அதன்பின் அவள் சந்திக்கும் இன்னல்கள் என்னென்ன? என்பதை அவளே அந்தரங்கம் பத்திரிகையில் தொடராக எழுதுகிறாள். அதன் வாசகனும் அவளது அறை நண்பரும் ஆன கதாநாயகன் அத்தொடரின் நாயகியே தன் அறைத் தோழி தான் என்பதை அவள் வாயாலேயே அறியும் போது அதிர்ச்சியுறுகிறான். நாயகனும் தன் பங்கிற்கு தன்னை பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை நாயகியிடம் சொல்கிறான். அதையும் தொடராக்க துடிக்கும் நாயகியும் நாயகரும் இணைந்தார்களா? அவர்கள் சந்திக்கும் இடையூறுகள் என்ன? நாயகர் பற்றியஅதிர்ச்சிகரமான தகவல் என்ன? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு படுசுவாரஸ்யமாகவும் படுக்கை ரகசியங்களாகவும் பதில் அளிக்கிறது அந்தரங்கம் படத்தின் மீதிக்கதை!



பல வருடங்களுக்கு முன் பிரசன்னா எனும் பெயரில் சில தமிழ் படங்களில் நடித்து பின் காணாமல் போன இளம் நடிகர், டான் எனும் பெயரில் மீண்டும் கதாநாயகராக மதன் எனும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்பதை விட ஆண்விபச்சாரியாக பல ஆண்ட்டி நடிகைகளுடன் படுத்திருக்கிறார் என்பதே சரி. படம் முழுக்க இவர் பண்ணும் சல்லாபங்கள் அந்தரங்கம் படத்தை செக்ஸ் படம் ஆக்காமல் செக்ஸ் படமாக்கி விடுகிறது பாவம்!



மோகனா, பரிமளா என இரண்டு பெயர்களில் புதுமுகம் கமலிகா கவர்ச்சி விருந்தை படைத்திருக்கிறார். கதைப்படியே, இவர் உடலை கட்டி படுக்க உடன்பட மறுக்கிறார். படத்திலோ உடம்பை மட்டுமே காட்டி சி இடங்களில் பயமுறுத்தவும் பல இடங்களில் பரிதாபப்படவும் செய்கிறார். என்னே விநோதம்!? காதல் போர்வையில் பெண்களை ஏமாற்றி விபச்சார குழியில் தள்ளும் வில்லன் ரமேசாக புதுமுகம் சஞ்ஜயும் அவருக்கு வேலை தரும் விபச்சாரக்கூட தலைவி சரசாவாக சிந்துவும் செம திறமை காட்டி இருக்கின்றனர். சபாஷ!



கே. நித்யானந்தத்தின் ஒளிப்பதிவு பட்ஜெட்டிற்கு ஏற்ற படப்பதிவை தந்திருக்கிறது . வன்மொழி படத்தயாரிப்பாளரும், வினியோகஸ்தரமான ஜே.வி.ருக்மாங்கதனின் கதை, திரைக்கதை, வசனம், இசை இயக்கத்தில் சமூக சீரழிவு கலாச்சாரங்களுக்கும், அது ஏற்படுத்திய காய்ங்களுக்கு மருந்து தடவுகிறேன் என்று செம செக்ஸ் விருந்தே படைத்திருக்கிறார். மருந்து விருந்தானால் என்ன ஆகுமோ? அதுவே ஆகி விடுகிறது கடைசியில்...



மொத்தத்தில் அந்தரங்கம் அசிங்கமும் அல்ல! தங்கமும் அல்ல! அவரது "ஆ" தங்கம்! "பி அண்ட் சி" சென்டர்களில் உள்ள "ஏ" சினிமா ரசிகர்களுக்கு "ஜலதரங்கம்"

No comments :

Post a Comment