Monday, February 8
பாலைவனசோலை விமர்சனம்
தினமலர் விமர்சனம்
சுஹாசினி, சந்திரசேகர், கைலாஷ், ஜனகராஜ், ராஜீவ், தியாகு ஆகியோர் நடித்து, 1982ம் ஆண்டு திரைக்கு வந்த பாலைவன சோலை படம் இப்போது ரீ-மேக்காக ரிலாக்ஸ் படுத்த வந்திருக்கிறது. பழைய பாலைவனசோலையில், சுஹாசினி நடித்த வேடத்தில் கார்த்திகாவும், சந்திரசேகர் நடித்த வேடத்தில் நிதின் சத்யாவும் நடிக்கிறார்கள். கைலாஷ் நடித்த வேடத்தில் சஞ்சீவ், ஜனகராஜ் நடித்த வேடத்தில் புதுமுகம் சாம்ஸ், ராஜீவ் நடித்த வேடத்தில் அபிநய், தியாகு நடித்த வேடத்தில் சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.
நிதின் சத்யா, சஞ்சீவ், சாம்ஸ், அபிநய், சத்யன் ஆகிய 5 பேரும் நண்பர்கள். தமிழ்சினிமா லாஜிக்படி ஒழுங்கான வேலைவெட்டி இல்லாட்டி ஹீரோவும், ஹீரோவின் நண்பர்களும் என்ன செய்வார்களோ... அதேயேத்தான் இவர்களும் மதில் சுவரில் ஏறி உட்கார்ந்து கலகலத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கச்சேரிக்குள் ஏஞ்சல் போல வந்து எதிர்வீட்டிற்கு வருகிறார் கார்த்திகா. அழகான பொண்ணை கண்டால் விடுமா இளைஞர் பட்டாளம். ஆளாளுக்கு கார்த்திகாவுக்கு வலை விரிக்கிறார்கள். கடைசியில் நிதின் சத்யாவுக்கு அடிக்கிறது லக். ஆனால் அவரை திருமணம் செய்ய முடியாதபடி கார்த்திகாவுக்கு உடல் ரீதியிலான கோளாறு. கடைசியில் காதலனை, நண்பனின் தங்கைக்கு தாரை வார்க்கிறார் கார்த்திகா.
பாலைவனச் சோலை என்ற பழைய படத்தின் ரீமேக் என்பதால் அடுத்தடுத்த காட்சிகளை ஒரிஜினலுடன் ஒப்பிட்டு பார்த்தால் பாலைவனம் மட்டும்தான் மிஞ்சுகிறது. புதியவர்களுக்கு சோலையாக தெரியும். சோகமே உருவாக, க்ளைமாக்ஸில் கண்ணீர் வடிக்கும் கார்த்திகா ஸ்கோர்களை அள்ளி விடுகிறார். காதலை வெளிப்படுத்தும் நண்பர்களை கழற்றி விடும் காட்சிகள் கலக்கல்.
நிதின் சத்யா, சஞ்சீவ், சாம்ஸ், அபிநய், சத்யன் ஆகிய ஐவருமே பாத்திரத்திற்கேற்ப பளிச் தேர்வு. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார்கள். அரவாணி வேடத்தில் நடித்திருக்கும் டைரக்டர் தயாளனின் நடிப்பும் அருமை. வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி சில இடங்களில் காமெடியாகவும் சில இடங்களில் கா(ம)நெடியாகவும் இருக்கிறது. இருந்தாலும் ரசிக்கலாம்.
மேகமே மேகமே பாடல் மட்டும் ஓ.கே.! மூர்த்தியின் ஒளிப்பதிவும், இ.கே.பாபியின் இசையும் இயக்குனர் தயாளனின் இயக்கத்திற்கு கை கொடுத்திருக்கிறது.
பாலைவன சோலை : ருசிக்கவில்லை!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment