Tuesday, April 6

அழுக்கன் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

டூசி எனும் தென்னாப்ரிக்க மொழி படத்தை யோகியாக அமீர் மட்டுமல்ல, அழுக்கனாக புதுமுக நாயகன் இயக்குனர் ஓமேஷ் கேசாரும் உல்டா செய்துள்ளது இப்படத்தின் முதல் இரண்டு ரீலிலேயே புரி்ந்து விடுவதால் கதை சுருக்கத்திற்கு முன்னதாகவே வெளிவந்த டூசி படத்தின் ஜெராக்ஸ் 'யோகி' விமர்சனத்தை பார்க்கவும். படிக்கவும்.

கதை உல்டா என்றாலும், காட்சி அமைப்புகளில் யோகியை காட்டிலும் அல்ட்ரா மாடர்னாக பில்ட்அப் கொடுத்து படத்தை தூக்கி நிறுத்த முயன்றிருக்கும் இயக்குனர் கம் நாயகர் ஓமேஷ் கேசாருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். லீலா, சஞ்ஜீதா, ரீச்சர் மணியம், முருகானந்த், வேணு அரவிந்த், ‌ஜெயஸ்ரீ, காதல் அருண், ரோபோ சங்கர் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளத்தில் ரோபோ சங்கர் - காதல் அருண் கூட்டணி மட்டும் ‌காமெடி எனும் பெயரில் கடிக்கிறார்கள். டி.வி. ஷோக்களில் பிரகாசிக்கும் அளவு கூட ரோபோ சங்கரின் காமெடி இப்படத்தில் இல்லாதது காமெடி!

சிருஷ்டியின் ஒளிப்பதிவு, கபிலனின் பாடல் வரிகள், விஸ்வமாலிக்கின் இசை என இன்னும் பல பலங்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆகி இருப்பதால் அழுக்கன் அழகாகவில்லை.

அழுக்கன் : அழகன் அல்ல!

No comments :

Post a Comment