Monday, April 26
சிவப்பு மழை விமர்சனம்
தினகரன் விமர்சனம்
மந்திரி சுமன் மகள் மீரா ஜாஸ்மினை கடத்துகிறார் சுரேஷ் ஜோகிம். சிறையிலிருக்கும் அலெக்ஸை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். மறைவிடத்த¤ல் அடைக்கப்பட்ட மீரா, தப்ப முயல்கிறார். அவரிடம் தனது மனைவியை இலங்கை ராணுவ அதிகாரி அலெக்ஸ் கொடுமையாக கொலை செய்ததை சொல்கிறார் ஜோகிம். அதைக் கேட்டு மனம் மாறும் மீரா, சுரேஷுக்கு உதவுவதாக சொல்கிறார். அலெக்ஸை கொல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கிறார். சிறையிலிருந்து அலெக்ஸ் விடுதலை ஆகிறார். அவரை சுரேஷ் பழிவாங்கினாரா என்பதற்கு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
12 நாளில் தயாரான கின்னஸ் சாதனை படம் இது. முதல் காட்சியிலேயே மீராவை ஒரு உருவம் கடத்தியதும் பரபரப்பு பற்றிக்கொள்கிறது. புது ஹீரோ சுரேஷ், நடிப்பில் நிதானம் காட்டுகிறார். கேரக்டருக்குரிய வேகம் இல்லை. மீராவுக்கு அதிக வேலை இல்லை. இலங்கை அதிகாரியாக வரும் அலெக்ஸ் மிரட்ட முயல்கிறார். காமெடி குறையை போக்குகிறார் விவேக். வீட்டுக்குள் பேய் இருப்பதாக நினைத்து அவர் நடுங்குவது தமாஷ்.
12 நாளில் தயாரான கின்னஸ் சாதனை படம் இது. முதல் காட்சியிலேயே மீராவை ஒரு உருவம் கடத்தியதும் பரபரப்பு பற்றிக்கொள்கிறது. புது ஹீரோ சுரேஷ், நடிப்பில் நிதானம் காட்டுகிறார். கேரக்டருக்குரிய வேகம் இல்லை. மீராவுக்கு அதிக வேலை இல்லை. இலங்கை அதிகாரியாக வரும் அலெக்ஸ் மிரட்ட முயல்கிறார்.
காமெடி குறையை போக்குகிறார் விவேக். வீட்டுக்குள் பேய் இருப்பதாக நினைத்து அவர் நடுங்குவது தமாஷ். சுரேஷின் போனுக்காக மீராவின் தந்தை சுமன், போலீஸ் அதிகாரிகள் காத்திருக்கும் காட்சிகள் சலிப்பு. ஒவ்வொரு முறையும் மகளை இழந்துவிடுவோமோ என்ற எண்ணத்திலேயே அமைச்சரான சுமன் நடுங்குவது காமெடி. சிறையில் அடைப்பட்டிருக்கும் அலெக்ஸை வெளியே கொண்டு வருவதற்காக சுரேஷ் போடும் திட்டங்கள் நேரத்துக்கு தக்கபடி மாறுவது வேகம் கூட்டுகிறது. மூன்று ஒளிப்பதிவாளர்கள் விஸ்வநாதன், எஸ்.இந்திரஜித், ஜமாலுதீன் பண¤யாற்றியுள்ளனர். காட்சிக்கு தகுந்த பின்னணி இசையை தந்துள்ளார் தேவா. காதல், டூயட், வன்முறை பக்கம் செல்லாமல் படம் இயக்கியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. அதே நேரம், நாடகத்தனமான காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
-நன்றி தினகரன்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment