Monday, April 26

பயம் அறியான் விமர்சனம்



தினகரன் விமர்சனம்

தாயை கொடுமைப்படுத்தி ரவுடித்தனம் செய்து திரிகிறார் ஹீரோ மகேஷ் ராஜா. போலீஸ் உடையில் தாதா வேலை பார்க்கிறார் வில்லன் கிஷோர். ஹீரோவை காதலித்து தனது கேரக்டரை முழுமை படுத்துகிறார் ஹீரோயின் உதயதாரா. காதல் வந்த பின் மகேஷ் ராஜாவின் வாழ்க்கை மாறுவதும் கிஷோருடன் மோதுவதுமே கதை.

கிஷோரின் அல்லக்கையாக இருந்து, அதில் கிடைக்கும் வருவாயில் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் வேடம் புதுமுகம் மகேஷ் ராஜாவுக்கு. ரவுடிக்கான மேனர¤சத்தை சரியாக செய்திருக்கிறார். காதல் காட்சியிலாவது முகத்தை கொஞ்சம் கனிவாக வைத்திருக்கலாம். உதயதாராவுக்கு நடிக்க வாய்ப்பில்லை. கிஷோர், தனது பாணியில் நடித்திருக்கிறார்.

கொடூர வில்லன் கிஷோர், மனைவி பாதிக்கப்பட்டதும் திருந்தி விடுகிறாராம். பலகை வைத்து பாலியல் தொழில் நடத்துவது, கரு கலைப்புக்கென்றே ஆஸ்பத்திரி நடத்துவது. வன்முறை, ஆபாசம் என அபத்தமான காட்சிகள் பல. இசை அமைப்பாளர் பி.சி.சிவனுக்கும், ஒளிப்பதிவாளர் சரவணனுக்கும் பாஸ்மார்க் கொடுக்கலாம். கொடூர காட்சிகள், லாஜிக் மீறிய திரைக்கதையால் பயமுறுத்தும் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் பிரதீஷ்.

மொத்தத்தில் 'பயம் அறியான்' - பயமுறுத்தும்!


-நன்றி தினகரன்

No comments :

Post a Comment