Wednesday, June 2

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

சீறிப்பாயும் அரேபியக் குதிரை, இரண்டுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், அழகிய தொப்பி, அசத்தலான கோட் சூட், ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் என ஜெய்சங்கர் காலத்திற்குப் பின் தமிழ் சினிமாவில் கவுபாய் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். இந்த ஒரு காரணத்திற்காகவே இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தை பாராட்டலாம். இந்த ஒரு காரணம் மட்டுமல்ல... நாம் இழந்த நம் இலங்கை சொந்தங்களையும் கூட இலைமறை காயாக ஆங்காங்கே ஞாபகப்படுத்தி நம் உணர்வுகளை தூண்டி விட்டிருக்கிறார் வம்பு! சாரி... சிம்பு!

கதைப்படி நம்மூரில் கிழடு கட்டை என்போமே.... அதுமாதிரி வயசான நாசரை கிழக்கு கட்டை எனும் பெயரில் உலவ விட்டு, அவரது ராஜ்யத்தின் கிழ் பல பகுதிகளை வாழ விட்டிருக்கிறார். அப்படி ஒரு அடிமை பகுதியில் வசிக்கும் சிங்கம் லாரன்ஸ், நாசரை எதிர்க்கிறார். இந்நிலையில் அவர் காணாமல் ‌‌போக, சிங்கத்திற்கு ஆதரவானவர்கள் ஒன்று கூடி, வேறு ஒரு ஏரியாவில் சிங்கம் கெட்-அப்பிலேயே இருக்கும் சிங்காரத்திற்கு சிங்கம் வேஷம் போட்டு, அழைத்து வருகின்றனர். சிங்கம் மாதிரி கவுபாய் கெட்-அப் கொடுத்து அழைத்து வரப்படும் மற்றொரு லாரன்ஸ் நிஜத்தில் பயந்தாங்கொல்லி. அவர் கிழக்குகட்டை நாசரை எதிர்த்து ராஜ்ஜியத்தை கைப்பற்றினாரா, அல்லது அடிபணிந்து அடிமை மக்களை மலுேம் அடிமையாக்கினாரா? என்பது மீதிக்கதை! இதனூடே பத்மப்ரியா, லட்சுமி ராய், சந்தியா ஆகிய மூன்று நாயகிகளுடனும் லாரன்ஸ் சலிக்க சலிக்க டூயட் பாடி ஆடுவது கலர்புல் களேபரம்!

இரண்டு லாரன்ஸ்களும் தங்கள் கவுபாய் பங்கை கலக்கலாக செய்திருக்கின்றனர். அவரை மாதிரியே கதாநாயகிகள் பத்ம்பரியா, லட்சுமிராய், சந்தியா உள்ளிட்டவர்களும் தங்கள் பணியை பக்காவாக செய்திருக்கிறார்கள். கலக்கல் கவர்ச்சி மூலம் உடம்பை சிலிர்க்க வைக்கிறார்கள். நாயகர், நாயகிகளைப் போன்றே வில்லன் நாசர், வி.‌எஸ்.ராகவன், மனோரமா, டெல்லிகணேஷ், சாய்குமார், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்களும் சபாஷ் சொல்ல வைக்கின்றனர். அதிலும் செவ்விந்தியராக வரும் எம்.எஸ்.பாஸ்கரும், அவரது மொழிப்பெயர்ப்பாளராக வரும் சாம்சும், அவர்கள் பேசும் பாஷையும் செம காமெடி... சரவெடி! இயற்கை உபாதைகளை எல்லாம் காமெடி ஆக்க முயற்சித்திருப்பது உள்ளிட்ட ஒருசில உவ்வே விஷயங்கள் தவிர, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஓ.கே.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், அழகப்பனின் ஒளிப்பதிவும், முத்துராஜின் கலை இயக்கமும் இப்படத்திற்கு பெரிய பலம். சிம்புதேவனின் இயக்கத்தில் 23ம் புலிகேசி அளவு இரும்பு ‌கோட்டை முரட்டு சிங்கம் இல்லை என்றாலும்... மோசமும் இல்லை.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் : முரட்டுக்கோட்டை இரும்பு சிங்கம்!

---------------------------------

குமுதம் விமர்சனம்

தமிழில் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் முழுநீள கௌடாய் படம். சிம்புதேவனின் மூன்றாவது படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்புகள்.

இரும்புக்கோட்டை அரசு ஜெய்சங்கர்புரத்தை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அதை சிங்கம் என்ற கௌபாய் தட்டிக்கேட்க, அவரை, இ.கோ. அரசு கொன்றுவிடுகிறது. இது ஊர் மக்களுக்குத் தெரியாமல் போக, சிங்கம் போல உருவ ஒற்றுமை கொண்ட வாரன்னைக் கொண்டு வந்து இகோ, அரசுக்கு எதிராக போராட வைக்கிறார்கள்.

வழக்கமான கதைதான் என்றாலும், கௌபாய் கிராமத்தை நம் கண்முன் நிறுத்துகிறார்கள். மரத்தால் ஆன அந்த வீடுகள், குதிரைகள், கௌபாய் உடைகள், தொப்பிகள், புதையல் தேடும் காட்சி என்று அட! போட வைக்கும் இடங்கள் ஏராளம்.

தூக்குமேடையில் நிற்கும் கௌபாய் லாரன்ஸை இளவரசு மௌலி, ரமேஷ்கண்ணா, வையாபுரி கோஷ்டி காப்பாற்றுவதிலிருந்தே சிரிப்பு ராஜ்யம் ஆரம்பமாகிவிடுகிறது.

நம்ம கடவுள் ஜெய்சங்கருக்கு வில்லன் அசோகன். பரம்பரை பரம்பரையா வர்ற இந்த பகையை சிங்கம் நீதான் தீர்க்கணும்? என்று மனோரமாவும் டெல்லிகணேஷûம் சீரியஸாக சொன்னாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

சிங்கமாக வரும் லாரன்ஸ் முழிக்கிற முழியும், துப்பாக்கிச் சுட கற்றுக் கொள்ளும்போது காட்டும் அப்பாவித்தனமும் சீட்டுக்கட்டு மேஜிக்கும் இறுதியில் வில்லனைக் கொல்ல சிங்கமாக சீறுவதும் அமர்க்களம். நிழலைவிட ஸ்பீடாக சுடும் ஒரிஜினல் ஹீரோவாகவும், நிழலைவிட ஸ்பீடாக எதிரியின் காலில் விழும் டுபாகூர் ஹீரோவிலும் லாரன்ஸ் அசத்துகிறார்

மூன்று கதாநாயகிகளையும் அளவோடு பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். செவ்விந்தியராக வரும் சந்தியா ஒரு பாடலுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். லட்சுமிராய் வில்லனுக்கு õமாம் போடவும், ஒரு கவர்ச்சியாட்டம் போடவும், புதையலைத்தேடி குதிரையோடு போகும் வேலை மட்டுமே வெள்ளைகவுன். டயனா தொப்பி என்று மனசில் நிக்கிறது பத்மப்ரியாதான். நடிப்பும் இருக்கு.

நட்சத்திரப் பட்டாளம ஏராளம் என்றாலும் இரும்புக்கோட்டைபாஸாக வரும் நாசர் டாப்.

தெலுங்கு நடிகர் சாய்குமார், அசோகன் போல நடிக்க முயற்சிக்கிறார். (முடியுமா?) செவ்விந்திய தலைவராக வரும் பாஸ்கர், செந்தில் ஆகியோர் பேசும் மொழி செமசிரிப்பு.
காஸ்ட்யூம் டிசைனருக்கும், ஆர்ட் டைரக்டருக்கும் ஒளிப்பாதிவாளருக்கும்தான் சபாஷ் போட வேண்டும்.

வில்லன்கள் ஏரியாவை (உஷா)புரம் என்று பெயர் வைத்திருப்பதும், அணு ஒப்பந்தத்தை சாடுவதும் உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை காமெடியாய் காலி பண்ணுவது பளிச்.

இந்தியானா ஜோன்ஸ், மெக்கானாஸ் கோல்டு பாணியில் குழந்தைகளை குஷிப்படுத்தும் படம் என்றாலும் கௌபாய் படமாய் இருந்தும் அடிக்கடி மாறும் ஏரியா பாஷை சாதாரணப் படமாக சறுக்கல் காட்டுகிறது.

சிரிப்புக்கோட்டை வறட்டு சிங்கம். குமுதம் ரேட்டிங் ஓ.கே.

No comments :

Post a Comment