Wednesday, June 2

மாஞ்சா வேலு விமர்சனம்


தினகரன் விமர்சனம்

அப்பா, அண்ணன், அண்ணி, குழந்தைகள் என்ற பாசமான குடும்பம் அருண் விஜய்க்கு. போலீஸ் அதிகாரியான அண்ணன் கார்த்திக், திருச்சிக்கு மாறுதலாகிச் செல்ல, உள்ளூர் தாதா சந்திரசேகருடன் மோதல். அவரின் கோபத்துக்கு ஆளாகிறார். விளைவு, அவரை கொல்கிறார் சந்திரசேகர். சாகும் தருவாயில், தம்பி அருண்விஜய்யிடம் உண்மைகளை சொல்கிறார் கார்த்திக். அண்ணன் உயிரோடு இருப்பதுபோலவே காட்டிக்கொண்டு எதிரிகளை பழிவாங்க தயாராகிறார் அருண். அப்போது, கார்த்திக் இடத்துக்கு வரும் போலீஸ் அதிகாரி பிரபு, தனது விசாரணையை தொடங்குகிறார். பின் நடப்பதை ஆக்ஷன் அடிதடிகளுடன் சொல்கிறது படம்.

கமர்சியல் மாஞ்சா தடவிக்கொண்டு களம் இறங்கி இருக்கிறார் அருண் விஜய். நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. துள்ளல், ஆக்ஷன், சென்டிமென்ட் என்று தாக்குகிறார். மொட்டை தலையுடன் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும் அறிமுகக் காட்சியிலேயே ரவுடிகளை ஆக்ரோஷமாக தாக்கி ரியாஸ்கானை காரோடு எரிக்கும்போது, ‘ஏன் இந்த கொலை வெறி?’ என்று கேட்கத் தூண்டுகிறார். அதன்பின்னர் விரியும் பிளாஷ்பேக் காட்சிகள் விறுவிறுக்கிறது.

போலீஸ் உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்க வரும் கார்த்திக்கை, ரத்தகாயங்களுடன் சந்திக்கும் சந்திரசேகர், ‘தன்னை ரவுடிகள் தாக்கிவிட்டார்கள்’ என்று கதறியபடி புகார் கொடுப்பதும், அடுத்த சில நொடிகளில் ரத்த காயங்களை துடைத்துவிட்டு, ‘நான்தான் இந்த ஊர் தாதா’ என்று எச்சரிக்கும்போதும் வில்லன் நடிப்பில் அசத்துகிறார்.

போலீஸ் உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்க வரும் கார்த்திக்கை, ரத்தகாயங்களுடன் சந்திக்கும் சந்திரசேகர், ‘தன்னை ரவுடிகள் தாக்கிவிட்டார்கள்’ என்று கதறியபடி புகார் கொடுப்பதும், அடுத்த சில நொடிகளில் ரத்த காயங்களை துடைத்துவிட்டு, ‘நான்தான் இந்த ஊர் தாதா’ என்று எச்சரிக்கும்போதும் வில்லன் நடிப்பில் அசத்துகிறார்.

தன்ஷிகாவை தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி ஹேமந்த் கெஞ்சும்போது, அவரை தூக்கி வரும்படி சந்திரசேகர் தனது அடியாட்களை ஏவுவதும், அவர்களை தொடர்ந்து வரும் அருண் விஜய் தாக்குவதும் தூள். ஊரையே நடுங்க வைக்கும் தாதா சந்திரசேகரை அவர் ஊரிலேயே அடித்து சாய்த்துவிட்டு சவால்விடும் அருண் விஜய், புலியாக சீறுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் கார்த்திக், முதல் பாதியில் கலக்கி எடுக்கிறார்.

தன்ஷிகா, கிளாமராக பாடல்களுக்கு ஆடிவிட்டு போகிறார். நடிக்க வாய்ப்பில்லை. கிளைமாக்ஸ் நெருக்கத்தில் என்ட்ரியாகும் பிரபு, உற்சாகமாக்க வைக்கிறார். சந்தானம், ஷகிலா, மனோகர் கோஷ்டி காமெடி நையாண்டியில் கலாய்க்கின்றனர். மணிசர்மா இசையில் பாடல்கள் பரவாயில்லை. வேகமாக செல்லும் கதையில் கிளைமாக்ஸுக்கு முந்தைய பாடல் வேகத்தடை. ஆக்ஷன் படம் என்பதற்காக, ஏகப்பட்ட லாஜிக்குகளை மீறி வழக்கமான படம் தந்திருக்கிற இயக்குனர் வெங்கடேஷ், இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், பக்கா வேலு ஆகியிருக்கும் மாஞ்சா வேலு.


-நன்றி தினகரன்

No comments :

Post a Comment